
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர், கார்த்தி, (வயது 20). பழனியிலுள்ள, அரசு உதவி பெறும் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன், திருமூர்த்திமலைக்கு சுற்றுலா வந்துள்ளார். திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பு எதிரில், உள்ள பகுதியில், கார்த்தி மற்றும் நண்பர்கள் தடுப்பை தாண்டிச்சென்று, அணையில் குளித்துள்ளனர்.
சிறிது நேரத்தில், கார்த்தியை காணவில்லை என உடன் வந்த நபர்கள், அழுதபடியே ஓடியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீசார், உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அணையில், தீயணைப்பு வீரர்கள், மிதவைகளுடன், தேடும் பணியில், ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கார்த்தியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அணையில், மூழ்கி, வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.