
மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட நரிமேடு அரசு பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை பொதுமக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் குடும்பத்துடன் வாக்களிக்க வந்திருந்தார்.
முதியவர் மயங்கி விழுந்த தகவலை அறிந்த அவர் உடனே அவரிடம் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் பரிசோதித்து பார்த்ததில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. டாக்டர் சரவணன் சிறிதும் தாமதிக்காமல் அந்த முதியவரை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சரவணனின் இந்த செயலை அங்கிருந்த வாக்காளர்கள் பாராட்டினர்.