
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.
காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று முதன்முறையாக இளம்பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்திருந்து தங்களது ஜனநாயக கடமையை செலுத்தினர்.