என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திண்டிவனம் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  திண்டிவனம்:

  திண்டிவனம் அருகே ஓங்கூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீதாலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ரூ.51 ஆயிரத்து 500 இருந்தது. விசாரணையில் அவர், சென்னை கண்ணதாசன் நகரை சேர்ந்த நாகரத்தினம் என்பதும், உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதேபோல் திருக்கனூர் பஸ் நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற வியாபாரி மினிலாரியில் ரூ.62 ஆயிரத்து 160-ஐ எடுத்து வந்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×