என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பா.ம.க. ஒன்றிய செயலாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் ஒன்றிய பா.ம.க. செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
  சேலம்:

  சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் ஒன்றிய பா.ம.க. செயலாளராக பதவி வகித்து வருபவர் சசிகுமார் (வயது 42). இவர் நேற்று காலை கொளத்தூர் கோவிந்தபாடியை அடுத்த குள்ளவீரன் பட்டியில் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

  இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர் சசிகுமாரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கொளத்தூர் போலீசாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக சசிகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  இதேபோல தஞ்சையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து, பாலோபாநந்தவனத்தை சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் கார்த்திக் (வயது 36), கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த சக்தி கோடியம்மாள்(29) 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×