search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    10.5 சதவீத இடஒதுக்கீடு: பா.ஜனதா நோக்கி கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

    வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில், ப. சிதம்பரம் பா.ஜனதா நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இது தற்காலிகமானது என்றார். அமைச்சர்கள் சிலரும் அவ்வாறே கூறினார். முதல்வர் சட்டத்தில் தற்காலிய சட்டம் என்று கிடையாது எனத் தெரிவித்தார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 10.5 சதவீத ஒதுக்கீடு நிரந்தரமானது என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் ‘‘10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை!

    இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு!

    முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? 

    எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×