search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வாகன சோதனையில் சிக்கிய வங்கி பணம்
    X
    திருப்பூரில் வாகன சோதனையில் சிக்கிய வங்கி பணம்

    திருப்பூரில் ரூ.1½ கோடி வங்கி பணம் சிக்கியது

    திருப்பூர் வங்கி பணம் ரூ.1½ கோடி சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் செந்தில், பிரபாகரன், சம்பத் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு மினிவேனை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. தொடா்ந்து பணத்தை வேனுடன் பறிமுதல் போலீசார் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து தாசில்தார் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பணத்தை கொண்டு வந்தது செக்யூர் வேலுவ் என்ற ஏஜென்சி நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை ஏ.டி.எம்.களில் நிரப்பி வருகிறது. ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக ரூ.1 கோடியே 31 லட்சம் கொண்டு வந்ததாக மினிவேனில் இருந்த பல்லடத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 27), கோவையை சேர்ந்த டிரைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சம்ப இடத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆவணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணம் சரியாக இருந்ததால் பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

    இதுபோல் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி லோகேஷ் தலைமையில், போலீசார் பாஸ்கரன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மினிவேன் பேங்க் ஆப் பரோடோ வங்கியை சேர்ந்தது.

    தொடர்ந்து அதில் ரூ.22 லட்சம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், வாகனத்தில் இருந்த கோவை வி.ஓ.சி. நகரை சேர்ந்த சீனிவாசன் (49), துடியலூரை சேர்ந்த டிரைவர் மாரிமுத்து (42) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கான ஆவணத்தை அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பணமும் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×