search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூறிய போது எடுத்த படம்.
    X
    வாக்குப்பதிவு எந்திரம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூறிய போது எடுத்த படம்.

    வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செய்முறை விளக்கம் - கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவுவின் அவசியம், வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடி:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவுவின் அவசியம், வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி அம்மா மருந்தகம் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி முன்பு வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் கலந்துகொண்டு, காய்கறிகள் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய கணினி பில்களை வழங்கினார்.

    பின்னர் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியையும் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

    மேலும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி வரும் வாடிக்கையாளர்கள் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக வளாகத்தில் வாக்குப்பதிவு குறித்து செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. அப்போது, எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்ககூறிப்பட்டது.

    முகாம் ஏற்பாடுகளை மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் அந்தோணிபட்டுராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×