search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
    X
    தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

    கள்ளக்குறிச்சியில் 557 பெண்களுக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் - கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினார்கள்

    சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சமூக நலத்துறை சார்பில் பட்டப்படிப்பு படித்த 331 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 226 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 557 பெண்களுக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் நிதி உதவியும், ரூ.2 கோடியே 9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 4 கிலோ 456 கிராம் தங்க நாணயம் என ரூ.4 கோடியே 31 லட்சத்து 98 ஆயிரத்து 900 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

    விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, நகரமன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யப்பா, அய்யம்பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×