என் மலர்

  செய்திகள்

  போலியோ சொட்டு மருந்து முகாம்
  X
  போலியோ சொட்டு மருந்து முகாம்

  போலியோ சொட்டு மருந்து முகாம் 31-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.
  மதுரை:

  மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போலியோ சொட்டு மருந்து கொடுப்பதால் பக்க விளைவுகள் ஏதும் உண்டாகாது. எனவே வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.

  மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×