search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவுநீர்
    X
    கழிவுநீர்

    குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

    விருமாண்டம்பாளையம் குடிநீர் குழாய் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்குளி:

    செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பிரதான சாலையில் விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லைகுட்டைபாளையம் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் மற்றும் கிருமிகள் கழிவு நீரில் இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாய் செல்லும் வழியில் செடிகள் முளைத்து புதர் போல் காணப்படுகிறது.

    போதிய அளவு துப்புரவு பணியாளர் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வடிகால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்ய முடியாத நிலையில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய்க்கு அருகிலேயே பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படும் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் இங்கு தேங்கி இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×