என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவில்பட்டி அருகே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு மக்கள் உரிமை இயக்கம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு மக்கள் உரிமை இயக்கம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். செயலாளர் குருசேகர், பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை தூய்மை பணியாளர்களிடம் கூட்டுறவு வங்கி கடன் தவணை தொகை பிடித்தம் செய்ததை வங்கிக்கு கட்டாமல் மோசடி செய்ததாகவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இதனை தொடர்ந்து நகரசபை ஆணையாளர் ராஜாராமனை சங்க நிர்வாகிகள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர், பிடித்தம்செய்த பணத்தை உடனடியாக வங்கிக்குசெலுத்த ஏற்பாடு செய்வதாகவும், மற்ற கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
  Next Story
  ×