என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் காந்தாரி அம்மன் கோவில் மேற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரீஸ்வரன் (வயது 35). கம்ப்யூட்டர் சர்வீஸ் தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது உறவினர் வள்ளிநாயகிபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி மகன் முருகன் (35). நேற்று முன்தினம் மாரீஸ்வரன் வீட்டுக்கு முருகன் வந்திருந்தார். பின்னர் முருகனை மீண்டும் அவரது ஊருக்கு கொண்டு விடுவதற்காக இரவு மோட்டார் சைக்கிளில் மாரீஸ்வரன் ஏற்றிச் சென்றார். கோவில்பட்டி அரசு தொழிற்பேட்டை அருகே சென்றபோது, மோட்டார்சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோரம் கவிழ்ந்தது. 2 பேரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரனுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். காயமடைந்த முருகன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சுதேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×