search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தொடர் மழையால் 6-வது நாளாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி தொடர்ந்த மழை 6-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி தொடர்ந்த மழை 6-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்ற வானிலை மைய அறிவிப்பால் கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ஏர்வாடி பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 82, மண்டபம் 66, பள்ளமோர்க்குளம் 22, ராமேசுவரம்60.20, தங்கச்சிமடம் 26.40 ,பாம்பன் 35.50, திருவாடானை 1, தொண்டி 1.10, வட்டாணம் 1.20, தீர்த்தாண்டதானம் 7, முதுகுளத்தூர் 18, கடலாடி 32.80, வாலிநோக்கம் 18.40, கமுதி 7.60 ஆர்.எஸ்.மங்களம் , பரமக்குடி ஆகிய இடங்களில் மழை பதிவு இல்லை.

    மாவட்டத்தில் 14 இடங்களில் பெய்த மழையின் மொத்த அளவு 379.20 மில்லி மீட்டராகும். அதனடிப்படையில் சராசரியாக 23.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×