search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறவை காய்ச்சல்
    X
    பறவை காய்ச்சல்

    பறவை காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கை- மரக்காணம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    பறவை காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    விழுப்புரம்:

    கேரளா மற்றும் தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரையோர கழுவெளி பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள், உள்நாட்டு பறவைகள் தஞ்சம் அடைவது வழக்கம். இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. அதை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதையொட்டி மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் கழுவெளி பகுதியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    இதனைதொடர்ந்து மரக்காணம் கடற்கரையோர கழுவெளி பகுதியில் பறவைகள் நோய் பாதிப்பில் இருக்கிறதா? கூட்டமாக இறந்து கிடக்கிறதா? என்று பொதுமக்களிடம், வனத்துறையினர், வருவாய்துறையினர் கேட்டறிந்து, தினசரி தகவல் பெறவும், கால்நடைத்துறை மற்றும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதிகாரிகளுக்கு பறவைகளுக்கு பாதிப்பு இருப்பின் மாதிரிகளை கால்நடைத்துறையினர் சேகரித்து தினமும் அறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×