search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி லட்சிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் விசைத்தறி தொழில் நிறைந்த நகரம். எனவே இந்த பகுதியில் சாயத்தொழிற்சாலைகள் அதிகம் இருந்ததன் காரணமாக காவிரி நீர் மாசுபடுவதை தடுக்க கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடரில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதுடன் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் 2014-ல் ஜெயலலிதா அறிவித்த ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனே அமைக்க வலியுறுத்தி லட்சிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஓம் சரவணா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
    Next Story
    ×