search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    தியேட்டரில் 100 சதவீத இருக்கை அனுமதியை ரத்து செய்யக்கோரி அவசர வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

    தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை ஐகோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது வக்கீல்கள் முத்துக்குமார், ராம்சுந்தர் ஆகியோர் ஆஜராகி, “கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து சினிமா பார்ப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    இது தற்போது கொரோனா தொற்று காலம் என்பதாலும், மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானதாலும் மருத்துவ குழுக்கள் இதுபோன்று 100 சதவீத இருக்கை செயல்பட அனுமதி அளிக்கவில்லை. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். இதுதொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என முறையிட்டனர். பின்னர் அவசர வழக்கை ராம்குமார் ஆதித்தன், முத்துக்குமார், போனிபேஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளன.
    Next Story
    ×