search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொப்பரை உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம்.
    X
    கொப்பரை உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம்.

    கொப்பரை கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.7 ஆயிரம் திடீர் சரிவு- விவசாயிகள் கவலை

    கொப்பரை கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.7 ஆயிரம் திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு தினமும் லாரிகளில்டன் கணக்கில்விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றப்படுகிறது.

    பொள்ளாச்சி, ஆனைமலை, செஞ்சேரி உள்ளிடடஅரசு கொள்முதல் நிலையங்களை விட காங்கயம், வெள்ளகோவில் வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை தொடர்ந்து மிக அதிகமாக உள்ளதால் கொப்பரை உற்பத்தி விவசாயிகள் தங்களின் கொப்பரைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் தேங்காய் உற்பத்திசீசன் நிறைவடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை உயராமல்இருந்தது அதிகபட்சமாக ஒரு கிலோகொப்பரை விலை ரூ.132 ஆக உயர்ந்து இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் வெளிமார்க்கெட்டில் கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.7 வரை சரிந்துஇந்த விலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. தேங்காய் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ள நிலையில் டன்னுக்கு ரூ.7 ஆயிரம் வரை கொள்முதல் விலை சரிவு வால்உற்பத்தியாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்துதமிழ்நாடு தென்னைஉற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:-

    வரும் ஆண்டில் தேங்காய் சீசன் மார்ச் இறுதியில் துவங்கிவிடும். மார்ச் மாதம் உற்பத்தியாகும் தேங்காய் முற்றிலும் விற்பனைக்கு சென்றுவிடும்.கொப்பரை உற்பத்திக்கு காய்கிடைக்காது. மார்கழி மாதத்தில் விழாக்கள்குறைவு என்பதால் தேங்காய்க்கும் செலவிருக்காது. எனவே, கொப்பரைஉற்பத்தியாளர்கள் இப்போதே கொப்பரையை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்து நல்ல பலன் அடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் காரணமாக வசதி உள்ள விவசாயிகள் தங்கள் கொப்பரைகளை இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். நடுத்தர விவசாயிகள் இருப்பு வைக்காமல் கொப்பரைகளை விற்பனை செய்து அந்த பணத்தில் தங்களது அன்றாட செலவினங்களை மேற்கொள்வது, தென்னையை பராமரிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தேங்காய் சீசனில் தற்போதைய கொப்பரை விலை இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×