search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனோலி தீவில் தவித்த 3 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் அழைத்து வந்தனர்
    X
    மனோலி தீவில் தவித்த 3 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் அழைத்து வந்தனர்

    மனோலி தீவில் தவித்த பெண் உள்பட 3 மீனவர்கள் மீட்பு

    கடல் கொந்தளிப்புக்கு நடுவே மனோலி தீவில் தவித்த பெண் உள்பட 3 மீனவர்களை மண்டபம் கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று மீட்டு அழைத்து வந்தனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் பகுதியில் இருந்து கடந்த 30-ந் தேதி ஒரு சிறிய நாட்டுப்படகில் பொங்கவள்ளி (வயது 32) என்ற பெண் மற்றும் சங்கர் (30), சரவணன் (20) ஆகிய 3 பேர் தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது படகு என்ஜின் பழுதானதால் 3 மீனவர்களும் மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலி தீவில் படகுடன் தஞ்சம் புகுந்தனர்.

    படகின் என்ஜினை சரி செய்ய முயன்றும் முடியாததால் கடந்த 3 நாட்களாக தீவிலேயே தங்கி செய்வதறியாது தவித்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக மற்ற மீனவர்களும் அவர்களுக்கு உதவ முடியவில்லை.

    3 பேரும் கரை திரும்பாததால் மீன்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். உடனே மண்டபத்தில் இருந்து நேற்று கடலோர காவல்படையினர் மற்றும் வனத்துறையினர் மனோலி தீவு பகுதிக்கு கப்பலில் விரைந்தனர்.

    அங்கு தீவில் தஞ்சம் அடைந்து இருந்த 3 மீனவர்களையும் கப்பலில் ஏற்றி உணவு, குடிநீர் வழங்கி அவர்களை பாதுகாப்பாக மீட்டு, அவர்களது படகையும் கயிறு கட்டி இழுத்து மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அந்த 3 மீனவர்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவில் தவித்த பெண் உள்பட 3 மீனவர்கள் மீட்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×