search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - 38 பேர் கைது

    அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் நடத்தினர்.

    அரசு உதவித்தொகையை தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போன்று குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், தனியார் துறைகளில் குறைந்தபட்சம் 5 சதவீதம் பணிகளை மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழங்க வேண்டும், 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத்துறை பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாவட்ட பொருளாளர் புவிராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், மலைக்கனி, மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்துகொண்ட 14 பெண்கள் உட்பட 38 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தங்க வைத்தனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர் உள்ளிட்ட 60 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
    Next Story
    ×