search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய பேரிடர் மீட்புப்படை (கோப்புப்படம்)
    X
    தேசிய பேரிடர் மீட்புப்படை (கோப்புப்படம்)

    கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழு

    புரெவி புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரெவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாவும், இதனால் தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அதேபோல் கேரள மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி 2, திருநெல்வேலி 3, தூத்துக்குடி 2, நாகை 2, ராமநாதபுரம் 2, சென்னை 2 என மொத்தம் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. கேரளாவில் 8 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
    Next Story
    ×