search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
    X
    108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா

    காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ்

    காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், தாசில்தார் கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் பேசுகையில், காரிமங்கலம் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தர்மபுரி மாவட்டத்தில் 25-வது ஆம்புலன்ஸ் சேவை வாகனம் ஆகும். இந்த வாகனம் காரிமங்கலம் சுற்றுவட்ட பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதத்தில் 2,500 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள், சாலை விபத்தில் சிக்கியவர்கள், அவசரகால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் மேலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×