search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X
    பெரம்பலூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணை தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். செயலாளர் குமரிஅனந்தன், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும். 

    21 மாத நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையினை ரத்து செய்திட வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சரவணசாமி, பால்பாண்டி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் பொருளாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×