search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சிறுவன்
    X
    ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சிறுவன்

    அபார ஞாபக சக்தியால் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சிறுவன்

    சிறுவனின் இந்த அபார ஞாபக சக்தியை பாராட்டி “இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு“ மற்றும் “ஆசியா புக் ஆப் ரெக்கார்டு“ ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் வழங்கியுள்ளது.
    பழனி:

    பழனி சண்முகபுரத்தை சேர்ந்த தம்பதி மணியாதவ்-ஆர்த்தி. இவர்களுக்கு சர்னித் அபினவ் (வயது 3) என்ற மகன் உள்ளான். இவன் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக் களை பார்த்து அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் இந்த அபார ஞாபக சக்தியை பாராட்டி “இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு“ மற்றும் “ஆசியா புக் ஆப் ரெக்கார்டு“ ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் வழங்கியுள்ளது.

    இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “எங்களது மகன் 2½ வயதில் கார்களின் லோகோவை பார்த்து அதன் நிறுவனங்களின் பெயரை உச்சரித்தது ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து அவனுக்கு பயிற்சி அளித்தோம். பின்னர் உலகில் உள்ள 185 பிரபலமான வாகன நிறுவனங்களின் லோகோவை வைத்து, அந்நிறுவனத்தின் பெயரை சொல்ல ஆரம்பித்தான். இதை “இந்தியா புக் ஆப் ரெக்கார்டு“ நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்கள் பல்வேறு வகையில் சோதனை நடத்தி அவர்களது புத்தகத்தில் எங்களது மகனை சாதனையாளராக அறிவித்து சான்றிதழ், பதக்கம் வழங்கினர். இதேபோல் “ஆசியா புக் ஆப் ரெக்கார்டு“ புத்தகத்திலும் இடம் வழங்கியுள்ளனர் என்றனர். மழலையர் பள்ளியில் ‘ப்ரீகேஜி’ படித்து வரும் சிறுவன் சர்னித் அபினவ்வின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×