search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சிவன்அருள் பேசிய போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் சிவன்அருள் பேசிய போது எடுத்த படம்.

    கற்போம் எழுதுவோம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூரில் தன்னார்வலர்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ பயிற்சி முகாம் நடந்தது. இதனை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் இணைந்து தன்னார்வலர்களுக்கான ‘கற்போம் எழுதுவோம்’ பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் சிவன் அருள் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து பேசினார். அப்போது எழுத்தறிவில்லாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கிட இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாத கல்லாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எழுதுதல், வாசித்தல் ஆகியவை கற்றுத்தரவேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் முதல் இலக்காக 5,539 பேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். 316 தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, வட்டார கல்வி அலுவலர்கள் உதயசங்கர், தென்னவன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர் சுரேஷ், வட்டார மேற்பார்வையாளர் மயில்வாகனம், முனிராஜி, மோகன்ராஜி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×