search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தரிக்காய்
    X
    கத்தரிக்காய்

    வடகாடு மலைப்பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி

    வடகாடு மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சத்திரப்பட்டி:

    ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு, வண்டிப்பாதை, கோமாளிபட்டி, கண்ணனூர் ஆகிய மலைக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கத்தரி நடவு செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. மேலும் விலையும் வீழ்ச்சி அடைந்தது. 

    கடந்த மாதம் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.100 முதல் ரூ.800 வரையே விற்பனை ஆகிறது. இதனால் கத்தரி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    Next Story
    ×