search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 33 வழக்குகள் பதிவு

    திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதைத்தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் அரசு அறிவித்துள்ள நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாநகரில் வடக்கு உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், தெற்கு உட்கோட்டத்தில் 16 வழக்குகளும் என மொத்தம் 22 வழக்குகள் விதிமுறை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோல் புறநகர் மாவட்டத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×