search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி
    X
    கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி

    கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு

    கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.
    அச்சன்புதூர்:

    கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் கலைமான் நகரில் யூனியன் சார்பில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 21 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த புதிய குடியிருப்பு கட்டுமான பணிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தரமான பொருட்களை கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது, கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணி, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரேட் சர்ச்சில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சக்திஅனுபமா, வருவாய் ஆய்வாளர் முருகன், ஊராட்சி செயலாளர் ராமர் மற்றும் பலர் உடன் இருந்தனர். 
    Next Story
    ×