search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உத்தமபாளையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    உத்தமபாளையம் அருகே தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 44 குளங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு போடி பகுதியில் உள்ள குளங்களை இணைக்கும் வகையில், இந்த கால்வாய் நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த மாதம் 18-ம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, கோம்பை ஆகிய ஊர்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. அதேநேரத்தில், போடி பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்தநிலையில் கோம்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், கோம்பையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் சுருளிவேல் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் பகுதியில் உள்ள 44 குளங்கள் நிரம்பிய பிறகே, 18-ம் கால்வாயில் இருந்து போடி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×