search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடு, முரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
    X
    கரடு, முரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    காட்டுப்புத்தூர் அருகே கரடு, முரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    காட்டுப்புத்தூர் அருகே கரடு, முரடான சாலையை உடனடியாக சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    காட்டுப்புத்தூர்:

    காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாளையம் புதூர் காமராஜர் மண்டபம் முதல் சின்ன பள்ளிபாளையம் வரை சுமார் 1.72 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இச்சாலை வழியாக கரூர் மாவட்டம் மாயனூர், ஸ்ரீராமசமுத்திரம், பெரிய பள்ளிபாளையம், சின்ன பள்ளிபாளையம் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் இந்த சாலை வழியாக பல்வேறு வேலைக்கு செல்ல முடியாத காரணங்களால் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் நவஜோதியிடம் கேட்டபோது, இந்த சாலை 40 ஆண்டுகளாக தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானதாக இருந்தது. பின் பராமரிப்பு முடியாமல் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது சர்க்கரை ஆலை நஷ்டத்தில் ஏற்பட்டதால் இச்சாலை 40 ஆண்டு காலமாக எந்த ஒரு சாலை பணியும் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் இந்த சாலையை பராமரிக்க தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். என்றார். ஆனால் இச்சாலையை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×