search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடியில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வாக்காளர்கள்
    X
    வாக்குச்சாவடியில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வாக்காளர்கள்

    பீகார் இறுதிக்கட்ட தேர்தல், கேரள உயர்கல்வி அமைச்சருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ள பீகார் இறுதிக்கட்ட தேர்தல், கேரள உயர்கல்வி அமைச்சருக்கு சுங்கத் துறை நோட்டீஸ், கமல் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது.

    * பீகாரில் இன்று 78 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    * பீகாரில் வாக்காளர்கள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனையை படைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    * கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84.62 லட்சமாக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 50,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 78.19 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.41 சதவீதமாகவும் உள்ளது.

    * நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து தேசிய விருதை வென்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் 2வது இடம் பிடித்துள்ளது.

    * மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட  தலைவர்களும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    * ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

    * அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண்ணை வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    * நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

    * மருத்துவ படிப்பில் சேருவதற்காக 25,733 பேர் விண்ணப்பித்திருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    * அமெரிக்க தேர்தலில் 300க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகள் கிடைக்கும் என்றும், பென்சில்வேனியா மாநிலத்தை வெல்லப்போவதாகவும் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    * கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடி வருவதாகவும், இதேபோல் மீண்டும், மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் விளையாடினால் நிலைமை கடினமாக இருக்கும் எனவும் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

    * தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிஹரிகாவுக்கு டிசம்பர் 9-ந்தேதி ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×