search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1,939 வாகனங்கள் ஒதுக்கீடு

    ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1,939 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம் பணிக்குச் செல்லும் மற்றும் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்று, தங்கள் பணியிடங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக அறிமுகம் செய்து ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகிறது. 2019-2020-ம் ஆண்டுக்கான இலக்கீடாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 1,939 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், கிராமம் மற்றும் நகர் புறங்களில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

    தகுதி உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அதே அலுவலர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

    இந்தத் தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×