search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சையில் வருகிற 5-ந் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் வருகிற 5-ந் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    தஞ்சாவூர்:

    அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த காளியப்பன், அருணாசலம், நசீர், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மின்சார திருத்த சட்ட மசோதாை-வை எதிர்த்தும், அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்குழு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் வருகிற 5-ந்தேதி சாலை மறியல் செய்வது என்றும், வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லி நோக்கி பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அகில இந்திய முடிவுகளை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவது. அதன்படி வருகிற 5-ந்தேதி தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்பது. வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெற உள்ள டெல்லி நோக்கி பயணம் போராட்டத்தையொட்டி தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் தேதியில் சாலைமறியலை அனைத்து பகுதிகளிலும் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×