search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டம்

    வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்ட மசோதாவை கண்டித்தும், இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு சத்தியாகிரக போராட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கையெழுத்து இயக்க மாவட்ட பார்வையாளர் வீரமணிராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விவசாயிகளுக்கு எதிராக செயல்படுத்தப்படும் வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த போராட்டத்தில் வட்டார தலைவர்கள் சுபாஷ், சரவணன், ஜனகராஜ், சண்முகம், வஜ்ஜிரம், வேலன், மாதப்பன், மாதையன், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், மோகன்குமார், வெங்கடாஜலம், கக்கன்ஜி, துரைசாமி, முன்னாள் நகர தலைவர் தகடூர் வேணுகோபால் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் நவீன் நன்றி கூறினார்.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின்போது பெறப்பட்ட பட்டியல்களை கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவரிடம் ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து பட்டியல்கள் மாநில நிர்வாகிகள் மூலம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
    Next Story
    ×