search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 16,221 ஆக உயர்வு

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 73 ஆயிரத்து 258 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 14 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 739 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருஞ்சிறை, வீரசோழன், மலைப்பட்டி, அருப்புக்கோட்டை ராஜீவ் நகர், ராமலிங்காபுரம், கூமாபட்டியைச் சேர்ந்த 2 பேர், ஆலங்குளம், சிவகாசி பள்ளப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டியைச் சேர்ந்த 2 பேர், முதலிப்பட்டி, சின்னஓடைப்பட்டி, சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக 1,280 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியிருந்தும் இம்மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதிலும் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் பரிசோதனைகளை அதிகரிக்கவும், முடிவுகளை தெரிவிப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×