search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து (கோப்புப்படம்)
    X
    தீவிபத்து (கோப்புப்படம்)

    கோழிப்பண்ணையில் தீ விபத்து- சுமார் 4,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

    திருவள்ளூர் அருகே கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 4 ஆயிரம் கோழிகள் தீயில் கருகின.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட  கல்மேடு கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் கோழிக்குஞ்சு வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் கோழிகள் இருந்த கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக கோழிகள் சூடுப்படுத்தும் மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 4000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்ததால் 2,000 கோழிக்குஞ்சுகள் உயிர் தப்பின. இந்த விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழி தீவனம், பராமரிப்பு உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×