search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தூத்துக்குடியில் முடிதிருத்தும் கட்டணம் உயர்வு

    தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க மாதாந்திர பேரவை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    மேலும், முடிதிருத்தும் தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு இயக்கம் நடத்த வேண்டும். முடிதிருத்தும் கட்டணத்தை சாதாரண சலூன் கட்டிங் ரூ.120, சேவிங் ரூ.70, கட்டிங் மற்றும் சேவிங் ரூ.170, சிறுவர் கட்டிங் ரூ.100, தாடி ஒதுக்குதல் ரூ.80, போம் சேவிங் ரூ.80, ஹேர்டை ரூ.150, கட்டிங், சேவிங் மற்றும் டை ரூ.350, ஹெட்மசாஜ் ரூ.200 ஏ.சி. சலூன்களில் கட்டிங் ரூ.150, சேவிங் ரூ.100, கட்டிங் மற்றும் சேவிங் ரூ.200, சிறுவர் கட்டிங் ரூ.120, தாடி ஒதுக்குதல் ரூ.100, போம் சேவிங் ரூ.100, ஹேர்டை ரூ.200, கட்டிங், சேவிங் மற்றும் டை ரூ.500, ஹெட்மசாஜ் ரூ.300 ஆக உயர்த்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×