search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பழங்கள் காய்கறிகள் ஏற்றுமதி செய்வதற்கு தயாராக இருப்பதை படத்
    X
    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பழங்கள் காய்கறிகள் ஏற்றுமதி செய்வதற்கு தயாராக இருப்பதை படத்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 260 டன் காய்கறிகள், பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதத்தில் 260 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    செம்பட்டு:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உணவு பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையும், பன்னாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

    இதனால் விமானங்கள் மூலம் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி செய்வது தடைப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.

    அதன்படி திருச்சியில் இருந்து துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் மூலம் திருச்சியில் இருந்து காய்கறிகள், பழங்கள், உணவுபொருட்கள், பூக்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் (செப்டம்பர்) மட்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பிலான 260 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை 22 சிறப்பு மீட்பு விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட இருப்பதால் ஏற்றுமதியானது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது
    Next Story
    ×