search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா நகரும் ரேஷன் கடைகளின் மூலம் பொருட்கள் வினியோகம் - கலெக்டர்  தொடங்கி வைத்தார்
    X
    அம்மா நகரும் ரேஷன் கடைகளின் மூலம் பொருட்கள் வினியோகம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அம்மா நகரும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அம்மா நகரும் ரேஷன் கடைகளின் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யும் பணியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
    பெரம்பலூர்:

    தமிழக அரசின் அம்மா நகரும் ரேஷன் கடைகளின் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யும் பணியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    10 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 17 கூட்டுறவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமங்கலம், அரும்பாவூர், புதுவிராலிப்பட்டி, புதூர், தேனூர், இரூர், தொண்டமாந்துறை, பூலாம்பாடி, லாடபுரம், அம்மாபாளையம் 1, 2, அடைக்கம்பட்டி, அரசலூர், வி.களத்தூர், எசனை, டி.கீரனூர், மேலமாத்தூர், அகரம்சிகூர், ஆதனூர், புதுவேட்டக்குடி ஆகிய 20 கடைகளின் வாயிலாக 3,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. அம்மா நகரும் ரேஷன் கடைகளின் மூலம் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு கீழ் உள்ள கடைகளில் பிரதி மாதம் முதல் சனிக்கிழமையன்றும், 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகளில் பிரதி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களிலும் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். விற்பனை பணியை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களே மேற்கொள்வார்கள், என்றார். பின்னர் அவர், அம்மா நகரும் ரேஷன் கடை வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி, துணை பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×