search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்
    X
    செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்

    ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகள் - செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

    ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தில் உபரிநீரை கொண்டு வரும் நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
    பாவூர்சத்திரம்:

    கீழப்பாவூர் பகுதி மக்களின் 48 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியனின் தொடர் கோரிக்கையை ஏற்று, ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.41 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

    ஆவுடையானூர் பத்மநாதபேரி குளத்தில் இருந்து, புங்கன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், ஆவுடையானூர் பகுதியில் புதிய இணைப்பு கால்வாய் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தில் உபரிநீரை கொண்டு வரும் நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கால்வாய் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

    இப்பணிகளை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். தொங்கு பாலம், திரவியநகர் தென்புறம், நாட்டார்பட்டி ரெயில்வே கேட் கீழ்புறம் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×