search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    3½ லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - அதிகாரி தகவல்

    உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் 3½ லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இல்லை என்றால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இ-பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக் கப்பட்டு உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படுகின்றன. மருத்துவ அவசர தேவைக்கு இ-பாஸ் கேட்டு 1,74,250 விண்ணப்பங் கள் வந்துள்ளன. 44,622 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 1,28,384 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டு உள்ளன.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 33,745 விண்ணப்பங்கள் வந்ததில் 9,891 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 23,205 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    வெளி மாவட்டங்களில் சிக்கிக்கொண்டு சொந்த மாவட்டமான கோவை திரும்ப 2,04,932 விண்ணப்பங்கள் வந்ததில் 45,612 விண்ணப்பங் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 1,57,718 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கடந்த மார்ச் முதல் தற்போது வரை கோவை வர இ-பாஸ் கேட்டு ஆன்லைன் மூலம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் 3 லட்சத்து 54 ஆயிரம் 425 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×