search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன் பண்ணையில் சப்-கலெக்டர் ஆய்வு
    X
    மீன் பண்ணையில் சப்-கலெக்டர் ஆய்வு

    தனியார் மீன் பண்ணையில் சப்-கலெக்டர் ஆய்வு

    பொள்ளாச்சி அருகே செடிமுத்தூரில் தனியார் மீன் பண்ணையில் சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே செடிமுத்தூரில் தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்க்கப்படுவதாக சப்-கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து சப்- கலெக்டர் வைத்திநாதன் நேற்று மீன் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பண்ணையில் தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து பண்ணை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது தாசில்தார் தணிகவேல், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த பண்ணையில் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்த்து உள்ளனர். எனவே அங்கு இருக்கும் 2 டன் மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×