search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன்
    X
    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன்

    சிவகாசி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

    சிவகாசி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இன்று அவரது உடல் அடக்கம் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் (வயது 74). இவர் கடந்த 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள வீட்டில் வசித்து வந்த பாலகிருஷ்ணனுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 

    இதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×