என் மலர்

  செய்திகள்

  திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார்
  X
  திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார்

  சிறுமி வன்கொடுமை வழக்கு- திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  சென்னை:

  கடந்த 2012ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம்  ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. அதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

  இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. கேரளாவை சேர்ந்த சிறுமி வன்கொடுமை செய்து மரணம் ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

  இதையடுத்து பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரின் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தும் வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  Next Story
  ×