search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது எடுத்த படம்.
    X
    போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது எடுத்த படம்.

    விழுப்புரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

    தளர்வு இல்லா ஊரடங்கு என்பதால் விழுப்புரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 1,250-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் செல்லாதவாறு இருக்கவும் நகராட்சி மற்றும் காவல்துறையால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதோடு, அப்பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பெரிய காலனி, கணபதி நகர், முத்தோப்பு, சித்தேரிக்கரை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தளர்வு இல்லா ஊரடங்கு என்பதால் விழுப்புரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீசார் டிரோன் கேமராவை பறக்க விட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே செல்கிறார்களா? என கண்காணித்தனர். இதுதவிர அப்பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×