search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலம் அருகே ஆதனூரில் எந்திர நடவு பணியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
    X
    நீடாமங்கலம் அருகே ஆதனூரில் எந்திர நடவு பணியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பு பணிகளில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - அமைச்சர் காமராஜ் பேட்டி

    கொரோனா தடுப்பு பணிகளில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகளை நேற்று அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது எந்திர நடவு பணியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலோடு விவசாய பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. விவசாயிகள் எல்லா காலத்திலும் இயற்கையை வென்று தான் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுகிற அரசாக தமிழக அரசு உள்ளது. விவசாயிகள் வேளாண் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர்கள் உத்தராபதி, ரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத்துறை) ஹேமா ஹிப்சிபா நிர்மலா, உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த காலத்திலும் அரசின் எல்லா துறைகளிலும் பணிகள் நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டை விட தற்போது 20 சதவீதம் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை பணிகள் தொடங்கிவிட்டது. இதனால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும். தார்மீக உரிமையை தமிழக முதல்-அமைச்சர் ஒருநாளும் மீறமாட்டார். தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்படும். யாருக்கும் அச்சுறுத்தல் இல்லாத நிலை உள்ளது. கொரோனாவால் இறப்பு என்பது குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். கொரோனா வராமல் தடுக்க வேண்டும். வந்துவிட்டால் அதில் இருந்து குணமாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×