search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகு மோதிய காட்சி
    X
    படகு மோதிய காட்சி

    பாம்பன் ரெயில் பாலத்தில் படகு மோதி விபத்து

    பாம்பன் ரெயில் பாலத்தில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றின் வேகத்தால் விசைப்படகு தூக்கு பாலத்தின் மீது மோதி உரசி விபத்து ஏற்பட்டது.
    ராமேசுவரம்:

    பாம்பன் ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்த பழமையான பாலமாகும். இதையடுத்து தற்போதுள்ள ரெயில் பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ. 250 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பாம்பன் பகுதியில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள கடல் பகுதியில் நேற்று விசைப்படகு ஒன்றில் 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கடல் நீரோட்டம் சற்று குறைந்த நிலையில் காணப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து படகை இயக்க சற்று சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றின் வேகத்தால் அந்த விசைப்படகு, தூக்கு பாலத்தின் மீது மோதி உரசிய நிலையில் நின்றது. இதையடுத்து அந்த படகை மீனவர்கள் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழு மீட்கும் பணியில் ஈடுபட்டது. 
    Next Story
    ×