search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தேனி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. டிரைவர் உள்பட மேலும் 62 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்துள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 596 பேர் கொரோ னாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 62 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில், க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ஆகிய 2 பேரும் அடங்குவர்.

    கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கை யனிடம் கார் டிரைவராக வேலை பார்த்த கருநாக்க முத்தன் பட்டியை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி யில் பிரபல நகைக்கடை உரிமை யாளர், அவருடைய மனைவி, சிவகங்கை நகராட்சி பில் கலெக்டராக பணியாற்றுபவர் உள்பட 6 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த நர்சு பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி யானதால் அவருடைய குடும் பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவருடைய தாய், தந்தை, தங்கை உள்பட 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்திய -திபெத் எல்லையில் பாது காப்பு படையில் பணியாற்றும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த நபர் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள தால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×