search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்க்
    X
    பெட்ரோல் பங்க்

    ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்

    தொடர்ந்து 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.

    82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. 17 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இந்த 17 நாட்கள் விலை உயர்வுக்குப் பிறகு நேற்று விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.  

    இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் ஒரு லிட்டருக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.18 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 52 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியது. இன்று லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 80.02 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.79.92 ஆக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×