search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் அடைப்பு (கோப்பு படம்)
    X
    கடைகள் அடைப்பு (கோப்பு படம்)

    சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட் ஒரு வாரம் மூடப்படுகிறது

    கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக கொத்தவால் சாவடி மார்க்கெட் ஒரு வாரம் மூடப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    சென்னையில் கோயம்போடு மார்க்கெட்டுக்குப் பிறகு மிகப்பெரிய மார்க்கெட்டாக கருதப்படுவது கொத்தவால் சாவடி. இங்கு காய்கறிகள் விற்கப்படுவதுடன் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆயிரத்திற்கு மேல் உள்ளன.

    சென்னை மண்டலத்தில் ராயபுரத்திற்கு கீழ் கொத்தவால் சாவடி மார்க்கெட் இருக்கும் இடம் வருகிறது. தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகமான கொரோனா தொற்று உள்ளது.

    ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரம் கடைகள் அடைக்கப்பட்டன. அதன்பின் ஒருநாள்விட்டு ஒருநாள் என்ற கணக்கில் கடைகள் திறக்கப்பட்டன.

    தற்போது கடந்த ஏழு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஒருவாரம் மார்க்கெட் மூடப்படுவதாக கொத்தவால் சாவடி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×